ஆசிரியர்
ஆசிரியர்


எதிர்பார்ப்பின்றி பொழியும் மழை
மழலை உள்ளத்தே கனிமொழி
ஒழுக்கம் ஊட்டும் அகல் விளக்கு
மன இருள் அகற்றும் சூரியன்
காலம் காலமாக ஓடும் கடிகாரம் குறளோடு சேரும் அதிகாரம்
நற்செய்தி வழங்கும் நாளிதழ்
வாழ்க்கைக்கல்வி வழங்கும் வள்ளல்
இளையோர் இளைப்பாறும் மரம்
மாணவமனங்களில் மந்திரவாதி
இன்று மட்டும் வற்றிய நதி!
வழிகாட்டிய வழிகாட்டி
ஒளியேற்றிய தீபம் இன்று
உணர்வற்ற சடலங்களாய்!
உலவும் அவலமதை
மாற்ற வேண்டும் மாணவனே!
மாற்றங்கள் வேண்டும்!
உன்னில், என்னில், உலகில்
மாணவப் பூக்கள் மலரட்டும்
ஆசிரியம் தழைக்கட்டும்
அறம் பெருகட்டும்.