மனப்பெண்
மனப்பெண்


ரோட்டிலே ஒரு ரோஜா
மனசு ஆனது லேசா
பெண் அவள் வந்தாள்!
ரோஜா செடி கேட்டது?
மானங்கெட்ட மனசே
ஏன் எனை மறந்தாய்?
குடை,கொண்டையுடன் ஒரு குயிலி
மனத்திரையில் ஒரு ஆசிரியை
நிழல் கேட்டது?
எப்பொழுது நான் நிஜமாவேன்
ஆடை பார்த்தேன்
அமலாபால் வந்தாள்
பருத்தி சொன்னது
அட போடா புண்ணாக்கு
பாரதம் என நினைத்தேன்
பாரதியோ, பாமரனோ வரவில்லை
அன்னை மட்டும்அழகாய்
காட்சி தந்தாள் என் விழித்திரையில்
நகை என்றால் நீ
உடையென்றால் நீ
நிலவென்றால் நீ
அன்பென்றால் நீ
இது என்றால் நீ
அது என்றால் நீ
நான் யார்?
உன்னில் என்னை
தொலைத்து விட்டேன்
கண்டுபிடி
கண்ணே
கண்டுபிடி.