Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Deepa Sridharan

Abstract Drama

5  

Deepa Sridharan

Abstract Drama

நிற சுழற்சி

நிற சுழற்சி

1 min
397


பக்கத்து ஊரில்

மேய்ந்து வந்து

தொழுவம் ஒளிந்த

எருமை மாடு

அதன் கருந்தோலிலெல்லாம்

களவாடி வந்த

பசும் புல்லின்

பச்சை வாசம்


பொக்கை வாய்

நிறம்பி வடியும்

எருமை வெண்பாலில்

மார் வற்றிய

ஊமைத் தாயவள்

முக்கிச் சுரந்த

குருதி அதன்

சிவப்பு வாசம்


தத்தித் தத்தி

நடந்த சிறுபாதமதில்

தைத்துக் கிடந்த

கருவேல முள்

குத்திக் கொட்டிய

செங்குருதியில்

கரிசல் மண்ணின்

கருப்பு வாசம்


கரிசல்மண் துப்பிய

கருப்பு உளுந்து

அக்கடைசி கஞ்சியில்

இரக்கப்பட்டு இடம்பெயர்ந்து

போன வருசம்

தெளித்துப் போன

அந்த ஈரவானின்

நீல வாசம்


காய்ந்த மண்மேல்

பந்தல் போட்டு

எத்தனமாய்

பொய்த்துக் கிடக்கும்

எட்டாத நீலவானில்

நீதிகேட்டு சூட்டெரிக்கும்

இளஞ் சூரியனின்

மஞ்சள் வாசம்

 

மஞ்சள் வெயில்

வாரிக் குளித்து

காய்ந்து சுருண்ட

ஏழைச் சனம்

பழுப்பு தோல்

போத்திய வயித்துக்குள்

நிறமில்லாத ஓர்

பசி வாசம்


பசி குடித்த

நீரும் நிறமில்லாமலே

வற்றிப் போக

வெளுத்துப்போன பிஞ்சுடல்

அதைப் புதைத்த

பக்கத்தூர் புல்லிலெல்லாம்

பால் கக்கிய

வெள்ளை வாசம்!



Rate this content
Log in