அம்மா
அம்மா
நம் உதடுகள் உளறிய முதல் வார்த்தை அம்மா
நாம் வலி ஏற்பட்டால் அலறிய ஒரு வார்த்தை அம்மா
வீட்டில் நுழைந்தவுடன் வெளிவரும் வார்த்தை அம்மா
அதிகம் சிரிக்கும் போது வரும் வார்த்தை அம்மா
மலைப்பு ஏற்படும் போது வரும் வார்த்தை அம்மா
நம் கண்கள் கண்ட முதல் இருட்டு தாயின் கருவறை
நம் கண்கள் கண்ட முதல் ஓளி தாய் மடி
நாம் பசியாறிய முதல் அன்னம் தாயின் ரத்தம்
நாம் தவழும் போது துரத்திய மிருகம் தாய்
நாம் நின்ற போது நிறுத்திய கைகள் தாயின் கைகள்
நாம் நடந்த போது நம்முடைய இலக்கு தாய்
நாம் வளரும் போது நம் குடை தாய்
நாம் வளர்ந்த பிறகு நம் முதல் குழந்தை தாய்
பெற்ற தாயை பேணிக்காக்கும் ஆண் கூட தாய் தான் !
இல்லம் வளர்த்த தாய்க்கு முதியோர் இல்லம் வழங்கா
உலகு வேண்டும் தாயே!!