தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்து
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்து
நிலவை ரசிக்காதோர் நிலத்தில் உண்டோ
காரிருள் மேகத்தில் வெண் நட்சத்திரத்தின்
எண்ணிக்கையை என்னாதோர் உண்டோ
ஆழ்ந்த அமைதியான இரவை
அரவணைக்காதோர் உண்டோ
இரவை நாம் ரசிக்கக் காரணம் அதன் அழகு மட்டுமோ
சிந்தை சிறிது சிந்தித்தால் -
ஆமென்ற இருள் விலகி
இல்லை என்ற ஒளி பிறக்கும்
அழகு மட்டும் காரணம் அல்லவே
இயற்கையைச் சிறிது திரித்துப் பார்த்தாள் பொருள் விளங்கும்
இரவிற்குப் பின் விடியல் என்ற ஒன்று இல்லை என்றால்
காலம்தோறும் இரவே இருக்குமென்றால்
இந்த அழகை ரசிப்பீ
ரோ
விடியல் என்ற ஒன்று இருக்கும் நம்பிக்கையில் தான் இரவை ரசிக்கிறோம்
அமைதி கொள்கிறோம்
இப்பொழுது காரிருள் ( கொரோனா) நம்மைச் சூழ்ந்து இருக்கலாம்
ஆனால் நாளை விடியல் என்ற ஒன்று இருக்கும் என்று நம்பிக்கைக் கொண்டு
இந்த காரிருளில் கிடைத்த குடும்பத்துடன் நேரம் என்ற அழகிய நிலவை ரசிப்போம்
அதன் அன்பு என்னும் நட்சத்திரத்தை எண்ண முடியாமல் திகைத்து நிற்போம்
நிச்சயம் விடியல் உண்டு இப்பொழுது இரவை ரசிப்போம்
இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்