சிவராத்திரி
சிவராத்திரி


தூய இரவில் தூயவன் துதி பாட
துயில் துறந்து வந்தேனே
மனம் மருகி உயிர் உருகி
உன்னைக் காண வந்தேனே
வேண்டுதல் ஏதும் இல்லாமல் என்
வேந்தன் உனை உணர வந்தேனே
பகடி செய்கிறாயா பக்தா - வேண்டும்
பலன் தரவே இந்த ராத்திரி
சிவராத்திரி என்றாய் என்னவனே
எதை வேண்டுவேன் எவ்வளவு வேண்டுவேன்
எங்கனம் வேண்டுவேன்
எனக்கென்ன தேவை என நான் அறியா வேளை உனை என்ன வேண்டுவேன்
என் இறைவா
நீ தரும் அனைத்தும் சுகம்
உன்னால் வரும் அனைத்தும் வரம்
என்று வாழ்வதே உனை அடையும் வழி
உனை வேண்டி உனை அடையும் வழி
அடைக்கும் வழி செல்வேனோ !!
சிவராத்திரி சிவனுடன் இருக்கும் ராத்திரி
சிவனை அடையும் ராத்திரி
சிவனால் அடையும் ராத்திரியல்லவே ஈசனே!!!