மனைவியின் பிறந்தநாள்
மனைவியின் பிறந்தநாள்
இது கவிதை அல்ல -
ஆம் இது கவிதை அல்ல
கவிதை என்பது நிதர்சனத்தின் மீது
கற்பனையை நிறுத்தி அலங்கரிப்பது
இதில் கற்பனையைக் களைந்து பூரண நிதர்சனத்தை மட்டும் புகுத்தி இருப்பதால்
இது கவிதை அல்ல
உனை வாழ்த்தும் எண்ணமில்லை
உனை வாழ்த்தி எனை நானே வாழ்த்தும் மடமை புரிய மாட்டேன்
நல்ல மனைவியாக மருமகளாக மகளாக உடன்பிறப்பாக இன்னும் பல ஆகவும் ஒருங்கே பெற்ற ஒருத்தியாக நீ
என் ஒருத்தியாக நீ கிடைத்த மகிழ்ச்சி இன்னும் மங்கவில்லை மனதில்
உன்னோடு வாழ வேண்டும் சில ஆண்டு காலமாவது உலகில்
அந்த சில ஆண்டில் மற்றொரு ஆண்டு முடிந்த சோகத்தில்
இன்னொரு ஆண்டு கிடைத்த மகிழ்ச்சியில்
இனம் புரியாத உணர்ச்சியில்
இந்த உரை(உண்மை) உன் பிறந்தநாள் பரிசாக
இப்படிக்கு,
உன் கணவன்