காதலோடு ஒரு பயணம்
காதலோடு ஒரு பயணம்


நானும் நீயும் ஒன்றாய் போக..
சாலை ஓரம் வீசும் தென்றிலிலே..
புது வர்ண வானவில்லாய் குமரியில் சூரியன் மறைய மாலை கதிர் ஒளியிலே உன்னை முறுக்கிட வண்டியில் பறக்க நேரம் மறந்து தூரம் கடக்க...
புது உணர்வுகள் பிறக்க கவலைகள் மறக்க குலுங்கி செல்லும் நொடியிலே மழைத்துளியில் உன்னோடு கட்டி அணைக்க உனது வேர்வை வாசம் மணக்க அதோடு காஷ்மீர் ரோஜா கண்ணை பறிக்க காதல் மலர தானே ஏதோ சிரிக்க உன் கை பிடிக்க மனதிலே ஆசைகள் கூட வீதியில் வெகுதூரம் செல்ல உன்னோடான பயணம் என்றும் இன்பமே..