நம்பிக்கை
நம்பிக்கை
நம்பிக்கை என்பது
முழுமையை காட்டிலும்
என்றும் சிறந்ததே
என்று அறிந்த காலம் இது..
முழுமை ஒரு
சிறந்த செயலை
உருவாக்க மட்டுமே தூண்டும்
சூழ்நிலைகளை சமாளிப்பதற்கு
நம்மிடம் உள்ள
நம்பிக்கை மட்டுமே
கடைசிவரை
கைகொடுத்து நிற்கும்
என்று புரிந்த காலம் இது...
சூழ்நிலைகளை
சமாளிக்க வேண்டும்
இல்லையென்றால்
அதை விட்டுவிடவே தோன்றுகிறது..
தூக்கி எறியபட்டாலும்
மிதித்து தள்ளப்பட்டாலும்
மேலே எழுந்து
நம்பிக்கையோடு
பிரச்சனைகளை சமாளித்து
நிறைய அனுபவங்கள்
கொண்ட காலம் இது..