பெண்களை போற்றுவீர்
பெண்களை போற்றுவீர்
ஒவ்வொரு பெண்களும் தனித்துவமே!!
போற்ற துணிவீர்! துணிவீர்..!
சொகுசாய் வாழ்ந்த காலமெல்லாம்
தன் அன்னை மடியில் மட்டுமே
துணை கோர்த்து சென்ற
மறுகணமே தாய்மை
அடைகிறாள் பெண்ணவள்..
இரவும் பகலுமாய்
பல வேலைகளும் பொறுப்புகளும்
தலைமேல் சுமந்து
இதிலே வேதனைகளும்
பெண்களின் வலிகளோ ஏராளம்..
கண்ட கனவுகளில்
கொஞ்சம் மனதிலே
ஆசையாய் நிற்கும்
புரிந்துகொள்ள ஒருவருமில்லை
அக்கறை காட்ட முற்படுவீர்!! முற்படுவீர்..!!
தன் தூக்கத்தை மறந்து
பாலூட்ட அன்று
கண்விழித்தவள் ...
இன்றுவரை
பெண் பிள்ளையை
பெற்றெடுத்து அவளை
பாதுகாத்து கண்களில்
கண்ணீரோடு
எப்படியாவது
முன்னேற்றி விடவேண்டுமென்று
எதிர் கால கனவுகளோடு
வலிகளை மறந்து
போராட துடிக்கும்
பெண்களை போற்றுவீர்!! போற்றுவீர்..!