மணித்துளிகள்
மணித்துளிகள்
அன்புள்ள நாளேடே,
உமக்குத் தான் விடுமுறை
எமக்கதெல்லாம் இல்லையே -
உரக்கச் சொல்லியே பொழுதுகள்
விடுவிடுவென - எவருக்கும் காத்திராமல் ஓடிக் கொண்டே தானிருக்கின்றன !
ஓடிய பொழுதுகள் மீண்டும்
நம்வசம் ஆவதில்லை !
பயனுள்ளதாக்குவோம் -
கிடைத்திருக்கும் மணித் துளிகளையே !