பெருமிதம்
பெருமிதம்
நான் ஆசிரியன் என்பதில்
பெருமை கொள்கிறேன்
ஏனென்றால் அவனே
விதியைக்கூறி விதியை மாற்றும்
வித்தகன்
காணாமல் கற்றான் ஏகலைவன்
இன்றும் அப்படியே
அன்றோ ஒரு துரோணர்
இன்றோ பல துரோணர்கள்
அதுவும் கட்டை விரலை
தட்சணையாக கேட்காத துரோணர்கள்
மாணவர்களின் அறிவுக் கட்டை
அவிழ்த்து விடத் துடிக்கும் துரோணர்கள்
ஆசிரியன் என்பதில்
பெருமை கொள்கிறேன்
பால் பேதமின்றி
ஆள் பேதமின்றி
அனைவரையும் ஆக்குபவன்
ஆசி
ரியன்
கற்பனைத்தேரில்
கற்பவனைக்கட்டி
கடிவாளமிட்டு
சாட்டையை சுழற்றி
இந்த உலகையே கண்முன் கொணர்ந்து
நிறுத்துவான் ஆசிரியன்
நான் ஆசிரியன் என்பதில்
பெருமை கொள்கிறேன்
தான் செய்த குற்றத்தை திருத்துபவன்
தான் கண்ட குற்றத்தை களைப்பவன்
தான் என்றும் நான் என்றும் கணம் இல்லாதவன்
தான் நின்று வளர்ப்பான்
தன்னையும் வளர்த்துக் கொள்வான்
ஆகையினாலே
ஆசிரியன் என்பதில்
நான் என்றும்
பெருமை கொள்கிறேன்