பொருந்தா விடை
பொருந்தா விடை
நான் பெண்ணாக பிறந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்
உன்னுடன் எளிமையாக உரையாடி இருப்பேன்
உன்னுடன் எங்கு வேண்டுமானாலும் உடன் இருந்திருப்பேன்
இவன் அவன் எவன் என்ன சொல்வானோ என்ற பயமில்லாமல்
உன்னுடன் கை கோர்த்து காற்றோடு காற்றாய் கரைந்திருப்பேன்
உன்னை... நீயாக நீ இருக்கும்படி ரசித்திருப்பேன்
எனக்காக நீ மாற வேண்டி இருக்காது உனக்காக நானும் அப்படியே...
எல்லாம் சரியாக இருந்திருக்கும்
பிழையிருந்தும்
உண்மை பொய்யாயினும்
பொய் உண்மையாயினும்
எது எதுவாகினும்
உனக்காக நானும் எனக்காக நீயும் இருந்திருக்கலாம்
காலம் கடந்தும் ...
பிரிவு இருந்தும் புரிதல் இருந்திருக்கும்
உன்னையும் என்னையும் பிரிக்க ஆயிரமாயிரம் திட்டங்கள் தீட்ட வேண்டியிருக்காது
யாரும் நமக்காக அழுதிருக்க மாட்டார்கள்
நம்மை தூக்கி எரிந்திருக்க மாட்டார்கள்
அருகில் இருந்திருப்பார்கள்
அன்போடு பேசியிருப்பர்கள்
நடித்திருக்க மாட்டார்கள்
நான் ஏனோ ஆணாய் பிறந்து போனேன்
உன் அருகில் இல்லாமல் தொலைந்து போக...
என்னைத் தொலைத்து
உனக்குள் மறைந்து போனேன்
மீண்டும் எழ முடியாத
மீளக்கூடாத
இடம் தேடி பயணிக்கிறேன்...
விடை கொடு.

