காதல் தோல்வி அடைவதில்லை
காதல் தோல்வி அடைவதில்லை
கோவமெனும் நெருப்பில் நெஞ்சம் கொதித்து போகிறது..
மூடியைத் தள்ளும் நீராவியாய் வார்த்தைகள் நாவினை தள்ளுகிறது..
கொட்டிவிட்டால் அள்ளிவிட வார்த்தை ஒன்றும் குப்பையல்ல..
திட்டமிட்டே பூட்டி வைக்கிறேன் நட்டம் என்றும் எனக்கில்லை..
வெறுப்பென்ன நான் விதைத்தேன் சொல்லிவிடு சித்திரமே..
விலகிக்கொள்ள விருப்பமென்றால் வீண் சண்டை தேவையில்லை..
மண் மூடிய புத்தகமாய் என்னை மறந்துவிட நினைக்கிறாயோ..
காகிதம் தான் மறைந்து போகும் கவிதை என்றும் மறைவதில்லை..