தீராக்காதல்
தீராக்காதல்


காதலில் நான் ஏமாந்து போகவில்லை தாடி வளர்க்கவில்லை சோகத்தில் தண்ணியடிக்கவுமில்லை புலம்பி தவிக்கவில்லை புறம் பேசவுமில்லை .
பலர் காதலை வெற்றியில் முடிக்க நினைப்பர் என் காதலில் வெற்றியுமில்லை தோல்வியுமில்லை காதலின் வெற்றி திருமணம் அல்ல தோல்வி பிரிவும் அல்ல அது இலக்கற்றது அன்பில் தொடங்கி அன்பில் மட்டுமே முடிவது.
நான் விரும்புவதை நேசிக்க மட்டுமே நினைக்கிறேன் எந்த நெருடலுமின்றி இணைந்திருக்க நீங்கா அன்போடு என்றுமே தொடர்ந்திருக்க என் காதல் மட்டுமே போதும்.
எல்லாம் ஒரு நாள் மாறும் என்கிறார்கள் அதில் எ
னக்கு எந்த நம்பிக்கையுமில்லை உன் மீதான என் காதல் எந்நாளும் நீர்த்து போகாது உன்னை மறக்க செய்யும் சக்தி இப்புவியில் இன்றுவரை இல்லை
நான் திக்கற்று திரியும்போதும் தீயிட்ட நெருப்பாய் நெஞ்சம் எரியும்போதும் உன் திசை நோக்கியே என் பயணம் தொடர்கிறது நீ அன்பின் கலங்கரை விளக்கு.
அவ்வப்போது நலம் விசாரிக்கும் குறுஞ்செய்திகள் இடையிடையில் இரண்டு கவிதைகள் வேண்டி கேட்டு ஒரு வாய்ஸ்மெசேஜ்எப்போதாவது சில பாடல் துணுக்குகள் இதை தவிர எதுவும் நான் செய்ததில்லை
ஆம் ! காதலில் நான் ஏமாந்து போகவில்லை என் காதல் தீராநதி