இதயம்
இதயம்
மின்னல் பார்வை வீசியவளால்
பாதிக்கப்பட்டது என்னவோ என் இதயம் தான்.......
பாதிப்பை உண்டாக்கியவளோ
என்னை திரும்பிக் கூட பார்க்காமல் சென்றாள்
தற்செயலான சந்திப்பு தான் என்றாலும்
முதல் பார்வையிலேயே என்னை முழுதாய் ஆட்கொண்டாள்
என் இதயத்திலோ காதல் நோயை பரப்பினாள்.....
திரும்பி பாராமல் போனவளை
திரும்ப பார்க்கும் சந்தர்ப்பமும் கிடைக்க
பேச முயன்றேன் வார்த்தைகள் வர மறுத்தன
பின் தொடர்ந்தேன் அவள் வீடு வரை
மறுநாளும் தொடர்ந்தேன்
அதற்கு மறுநாளும்.....
அடுத்த நாள் அவளே வந்தாள்
கண்களில் சிறு கோபம் உதட்டில் மௌனம்
இருவர் கண்கள் மட்டும் பாஷைகள் பேசிக்கொள்ள
நான் இதழ் திறக்கும் முன்
இதயம் திறந்தாள்
தன் காதலை உரைத்தாள்
உறைந்தேன் நானும் அந்நொடியே.....!!!
- நித்யஶ்ரீ சரவணன்