என்னவளே!!
என்னவளே!!
தென்றலில்,
என்னவளின் சேவி ஓரத்தில் ஊஞ்சலாடும்
அச்சிறு கூந்தலோ,
என்னை போர்க்களத்திற்கு அழைப்பார் போல் என்னவளின் கன்னத்தில்
முத்தம் விட்டு செல்கிறதே...
நானோ அதனை என் காதலால் வீழ்த்தி,
சேவிக்கு பின்னால் தள்ளி விட்டேனோ...
பிரம்மனே!
எந்தன் விரல்களின் இடுக்குகள்,
என்னவளின் விரல்களுக்காக படைத்தாயோ...
இங்கு காற்றுக்கு இடமில்லை,
காதலுக்கு பஞ்சமில்லை...
அதனால், தலைசிறந்த சிற்பி ஆனாயோ...
எந்தன் நெஞ்சில்
என்னவள் சாய்ந்திடும் வேலையில்,
மெல்லிய மயிலிரகைப் போல்
என்னவளின் கண் இமைகள்
எந்தன் மனதை வருடும் போது,
எந்தன் இதயமோ ஒவ்வொரு துடிப்பிலும்
அவளின் நெற்றியில் முத்தம் இடுகிறதோ...
காதல் முத்தம் அல்லவா இது...
என்னவள்,
எந்தன் தோள்களில் சாய்ந்து
எந்தன் விரல்களை
பற்றி கொல்லும் வேளையில்
எந்தன் உலகத்தையும்
பற்றி கொண்டாலோ...
அவளது காதல் கண்களால்...
எவர் கண்ணாரு (திருஷ்டி)
வந்ததோ அறியேன்,
விதியின் சுழற்சியால்
என் காதல்
என் விழிகளில் மறைகிறதோ..
முட்கள் போல் வலியை
என்னவளிடம்
புண்ணகையால் மறைக்கும் வேளையில்
தோற்றுவிடுகிறேனோ..
என் விழிகளின் கண்ணீரால்...
gn-center">
என்னவள்,
சுமையின்றி சாய்ந்தாலும்
அவளின் பொன் நினைவுகளால்
சுமை ஆனதே
எந்தன் உலகமோ..
மீண்டும் அவளிடம் வாழ இயலாதா
எந்தன் காதல் மொழிகள்..
என்னை விட்டு விடாதே என
என்னவள் எந்தன் நெஞ்சில்
இறுகும் கணத்தில்
காலமே நீ யுகமாய்
நீள மாட்டாயோ...
அவள்,
கண்ணீரால் முத்தமிட்டாள்
சத்தமின்றி
பரிதவிக்கிறதே
எந்தம் இதயம்
அவளின்றி எவ்வாறு துடிபேன் என்று...
நான் உன்னுடன் இறுதி வரை இருப்பேன் என்று
மலர்களைக் கோர்த்த மாலை போல்
என்னவள் விரல்கள்
எந்தன் கை கோர்க்கையில்
பிரிவு என்னும் உளியால்,
ரத்தமின்றி சிதைந்து எடுத்தாயோ..
என்னுடன் மீண்டும்
போருக்கு வர மாட்டாயா என...
அச்சிறு கூந்தலும் வெற்றியின் துன்பத்தில்
தலை தாழ்த்தியதோ...
அனுமதியின்றி வந்தாயோ,
அனுமதியுடன் விடைப்பெற நினைத்தாயோ..
மிக புண்ணகைக்க வைத்தவலும் நீயே,
மிக வலி கொடுத்தவலும் நீயே..
எண்ணிலடங்காத நினைவுகளும் கொடுத்தாயோ...
உண்னண இறுதி வரை நினைப்பதற்கு,
எந்தன் அனைத்து காதலும்
உன்னுடன் எடுத்து சென்றாயோ..
உயிரற்ற சிலையாய் நின்றனே...
நீ சென்ற வழியை விழிகளால் வெறிக்கையில்...