தேநீர் நேரம்
தேநீர் நேரம்
ஒரு தேநீர் குடித்த
இடைவேளையின்
இடைவெளியில்
இடரி விழுவேனென
நினைக்கவில்லையடா கண்ணா.
மழைக்கேங்கும் பாலையோ
நதியிடம் யாசிக்கும்.
காவியங்கள் உயிர்த்திட
உன்னிடம் கையேந்தினேன்.
உயிரினில் இனித்திட
உருக்கிடும் துயரெலாம் கருகிட
யாழினை எடுத்தேனடா கண்ணா இனி
நதியென பெருகும் காதலடா
வாழ்க்கையின் தவப்பயனாய் ஆனாயடா..
வானின் மதி போல சூல் கொண்டாயடா.
பாம்புகள் ஊறும் பாலையிலே
எங்கு கால் பதிப்பதென
தடுமாறிய ஓர் தருணம்
மேலிருந்து கயிறாய் வந்து
பாம்பினூடே என்னையும்
காப்பாற்றிய....கண்ணன் நீதானடா..