நுரைத்த கோப்பைகளினூடே....
நுரைத்த கோப்பைகளினூடே....


அன்பரே!
உன்னை நம்பியே
இம்மதுக்கடையை திறந்தேன்!.
நீ குடிக்கும் மது அனைத்தும் இலவசம்
ஒரே ஒரு நிபந்தனை.
வேகமாகவோ நிதானமாகவோ
சூப்பியோ உறிஞ்சோ குடி
முழுவதும் நிரப்பி இருக்கும்
இக்கோப்பையின் அடியில் கிடக்கும்
ஒரு இதயம் தெரிகிறதா?
விடாமல் குடித்து இறந்தவனின்
இதயம் தான் அது.
அதன் மேல்
உன்னிரு உதடுகள் உரச வேண்டும் .
அஃதே எமது நிபந்தனை..
வாரத்திற்கு நான்கு இதயமாவது கிடைக்கிறது.
விரைவில் உன் இதயமும்
இன்னொரு புது வாடிக்கையாளரின்
உதடுகளை உரசட்டும்.
குடுத்த காசிற்கு போதையை முழுவதும்
எடுத்துக்கொண்டதாய்
எக்காளமிடுகிறாய்..நீ.
மதுவோ, உன்னையே எடுத்துக்கொண்டதாய்
எள்ளி நகையாடுகிறது, ஏளனமாய்.
நீ மதுவைக்குடி..
பின் அது உன் உயிரைக் குடிக்கும்
வந்து போய்க் கொண்டிருக்கும் சாத்தானை
ஏமாத்தி விடாதே.