செல்வந்தர் கதை
செல்வந்தர் கதை
ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். மிகவும் நல்ல மனிதர். அவருக்கு ஒரு மனைவி மற்றும் நான்கு பிள்ளைகள். அவர் சொத்தை 5 பங்காக பிரித்தார். ஒரு பங்கை தனக்கு மற்ற நான்கு பங்கை மகன்களுக்கும் கொடுத்தார்.
சற்று நாட்களில் அவர் மனைவி இறந்து போனார் .பிறகு அந்த நான்கு பிள்ளைகளும் அப்பா நீங்கள் ஏன் தனியா கஷ்டப்படுகிறேன். தனியாக ஏன் கஷ்டப்படணும். எங்களுடன் வந்து இருங்கள் என்று மிகவும் பணிவன்போடு கேட்டுக் கொண்டனர்.
தந்தையும் சரி இரண்டு மாதங்கள் கழித்து வாருங்கள் பதில் சொல்கிறேன் என்றார். பிறகு தன் வீட்டு வேலையாள் இடம் ஒரு கூண்டு வாங்கி வரச் சொன்னார். அதில் நான்கு குஞ்சுகளை மட்டும் அந்த கூண்டில் அடைத்து வைத்தார். குருவியும் சென்று தானியங்களை எடுத்து வந்து குஞ்சுக்கு ஊட்டிவிட்டு பிறகு பறந்து மரத்திற்கு சென்று விடும்.
இவ்வாறாக சில நாட்கள் கழிந்த பின்பு இறக்கை முளைத்து சுற்றி சுற்றி பறந்து வந்தன.
தந்தை குருவியை மட்டும் கூண்டில் அடைத்தார்..
அந்தக் குருவிக் குஞ்சு வரும். தந்தைக்கு தானியங்கள் எடுத்து ஊட்டி விடும் என்று எதிர்பார்த்தார்.
ஆனால் குருவிகள் பறந்த பிறகு திரும்பி வரவே இல்லை. அந்த தந்தை பசியால் துடித்தது. தானியங்கள் ஊட்டி பிறகு கூண்டைத் திறந்து பறக்கவிட்டார். இரண்டு மாதம் கழிந்த பின்பு மகன்கள் வந்தனர் அப்பா எங்கள் வீட்டிற்கு வாருங்கள்.
உங்கள் சொத்தை எங்களுக்கு கொடுத்து விடுங்கள் பிரித்து. நீங்கள் எங்கே தங்க விருப்பமோ அந்த மகன் வீட்டில் தங்கிக் கொள்ளலாம் என்றனர. என் மனைவியுடன் நான் இங்கு வாழ்ந்த நாட்கள் மிக இனிமையான நாட்கள் அந்த நினைவில் நான் இங்கே இருந்து விடுகிறேன் என்று கூறினார்!