மன நினைவில்
மன நினைவில்
1 min
1.2K
"என் கண்ணுக்கு புலப்படவில்லை கடவுள்
என் கண்களுக்கு தெரியவில்லையே கடவுள்
என்பதால்
ஆண்டவன் இல்லையே என்பேனா?
இல்லையில்லை
சிறியேன் என் கண்களுக்குத்தான் தெரியவில்லை கடவுள்
பெரியோர் பலர் பலர் கண்டுகொண்டனரே
அவர் காட்டிய பாதையில் சென்றே
அவன் தாள்கள் தரிசிக்க விழைவேன்
இவ்வாயுள் உள்ளவரை கண்டிடுவேன்
ஒருநாள் அவன் பாதங்களை நான் அடைவேன் என்ற
மன நினைவில்"