வாழ்க்கைப் பாடம்
வாழ்க்கைப் பாடம்


வீதியெங்கும் மழைத்துளிகள்
முந்தைய நாள் தெளித்து
வைத்த ஒரு வாளி தண்ணீர்
குட்டைகள்!
வீதியெங்கும் தார்சாலைகள்
போட இலஞ்சம் வாங்கிய
குழிக் கற்களின் சிரிப்பில்
முதியோரின் தடுமாற்ற நடை!
வீதியெங்கும் மரம் நட்ட
அசோகரின் காலம் மறந்து
அணுஉலைகளை வளர்த்த
நாம் கலாம் வளர்க்கச் சொன்ன
மரங்களை ஏன் வளர்க்க
மறந்தோம்?!