நீயின்றி வாழ்தல் கூடுமோ..
நீயின்றி வாழ்தல் கூடுமோ..


என்னருந்தேனே..
இனிய தெள்ளமுதே..
எம் தமிழே..
நீயின்றி யாம் வாழ்ந்திடுவோமோ..
புல்லாங்குழல் வழி செல்லும் காற்று..
இசையாதல் போல்..
எம்முடலுள் சென்று உயிரோடு கலந்து.. ஒலியாய் வெளிவரும் நீ..
வெறும் மொழிதானோ?
எம் உணர்வல்ல நீ..
விரல் நுனி சிந்திடும் பலமுத்துகளை..
நாவின் நுனி கொட்டிடும் பல முத்துக்களை..
எத்தனை முத்துக்கள் பிறப்பினும்..
அதைக்காத்து வைத்த வைரச்சிப்பியடடி நீ..
"color: rgb(0, 0, 0);">எம் தமிழே..
காற்றோடு நீ சோற்றோடு நீ
காவியத்தில் நீ கோவிலுள் நீ..
கடலுள் நீ கடல் தாண்டி செல்லின்..
அங்கே இருக்கும் கொடிகளிலும் நீ..
தமிழன் மட்டுமல்லாது உலகோர் வியக்கும்
உயர் அதிசயம்
உலக அதிசயம் நீ..
உன்னாள் உயிர் கொண்டு..
உயிர் போயின் உனக்கே
உடல் கொடுத்து பழகிய யாம்
நீயின்றி வாழ்தல் கூடுமோ..
எம் தமிழே நீயிருக்க
எம் நிழலும் தரையில் வீழுமோ?