STORYMIRROR

AARTHE RAJ

Tragedy Classics Crime

4  

AARTHE RAJ

Tragedy Classics Crime

கள்ளி விருந்து..

கள்ளி விருந்து..

1 min
45

வைகை நதிக்கரையிலே

நேர்மேல் வானிலே..

நீல வண்ண திரை விரித்து

உச்சாணி கொம்பில் அரியாசணம் போட்டு

கதிர் அவனோ..

சுகவாசமாய் 

நதிமகளின் நாட்டியம் காணும் நேரம்..

கூழாங்கல் மொய்த்த கரையிலே..

மாமர நிழலிலே 

காது கிழிந்த கிளவியொருத்தி

பச்சிளம் பிஞ்சை மாரணைத்து

பாடுகிறாள்..


..உன்ன மண்சுமக்க வரம் போதவில்லையம்மா..

பெண்ணா நீ பொறந்தா உனக்கு

விதி கள்ளியம்மா..

உன்ன படைச்சவளும் உன்ன அழிச்சவளும்

பெண்ணாக உருவிருக்க..

காணாத துன்பந்துயரம் ஏதுண்டு விலகிருக்க..

தாய்பால் ஊட்டி வளத்தா 

நாயுநரியும் திண்ணிடுமே..

கள்ளிபாலு விருந்தாலே

துன்பமெல்லாம் தீர்ந்திடுமே..


கண்ணே கண்ணுறங்கு..

கிழத்தி மார்மீது...

பொன்னே கண்ணுறங்கு..

பாவி தோள்மீது.....


ஈரைந்து திங்கள்..

பொத்தி வளர்த்தாய்..

உலகம் காணவிடாது..

உலகையே உன்னுள் கொணர்ந்தாய்

எனக்காக..

விருந்துகள் எத்தனை

விசாரிப்புகள் எத்தனை..

ஏனோ இன்றென்னை

கிடாவாய் வெட்டிவிட்டாய்..

நானும் பெட்டை என்பதால்..



Rate this content
Log in

Similar tamil poem from Tragedy