விடுதலை செய்து விடு
விடுதலை செய்து விடு
கவலைகள் கழுத்தை நெரித்தன...
உடல் உபாதைகள் உடலை வருத்தின....
உடலோ என்று ஓய்வு கிடைக்கும் என்று ஏங்கியது!
கண்களோ உறக்கத்தை தேடி நாளும் அலைந்தது!
காலை முதல் மாலை வரை
சக்கரம் கட்டிய வண்டிகளாய்.......
நாள் முழுவதும் ஓட்டம்! !
எத்தனையோ வேலைகள்! எத்தனையோ மன அழுத்ததங்கள்!
சமையல் வேலை..... துப்புரவு தொழில்
பாத்திரங்கள் கழுவுதல்... துணிமணிகளை வெளுத்தல்!
காலை மாலை பிக்கப்... ட்ராப். செய்தல்!
மாலை வேளைகளில் ட்யூஷன் ஹோம் ஒர்க்!
இடைப்பட்ட நேரத்தில் பஞ்சாயத்து வேலை..... பிள்ளைகளுககு!
ஓய்வில்லை ஆனால் அதில் ஓர்
உற்சாகம் இருந்தது!
பாரத ரத்னா மட்டுமல்ல பரம் வீர் சக்ரா!
இல்லை.... இல்லை.... எத்தனை விருதுகளோ...... அத்தனையும் எங்களுக்கு வழங்கலாம்!
இன்றோ நிர்பந்தங்கள் ஏதும் இல்லை!
அமைதியாக பொழுது விடிகிறது!
அமைதியாக பொழுது முடிகிறது
ஆர்பாட்டம் இல்லை! ஆட்டம் பாட்டம் இல்லை!
விரும்பிய உணவு..... விரும்பிய
ஓய்வு...
பகலில் உறக்கம்...... இரவிலும் உறக்கம்!
எல்லோரும் பக்கத்தில்!
ஆயினும் சிறகொடிந்த பறவைகளாய் ஓர் கூட்டுக்குள்!
கொரோனோ உன் கட்டுக்குள்!
சிரித்துப் பேச முடியவில்லை!
சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள சக நண்பர்கள் இல்லை!
மனதில் ஏதோ ஓர் அழுத்தம்!
ஆளுக்கு ஒரு அறையில்!
கைப்பேசி.... கணினி.... தொலைக்காட்சிப் பெட்டிகளோடு!
எந்திரத்துடன் எந்திரங்களாய்,.....
காலை முதல் மாலை வரை....
பதிவிட்ட வேலைகளை செய்திடும் இயந்திர மனிதனைப் போல்!
மனதில்உற்சாகம் இல்லை.... உத்வேகமும் இல்லை!
பொழுது தானாய் விடிகிறது! தானாய் முடிகிறது!
வறுமை ஒரு புறம் வாட்ட... நீ ஒரு புறம் மிரட்ட
மனதில் ஏதோ ஒரு பயம்!
வயிற்றைப் புரட்ட...
தாள முடியவில்லை வேதனை!
மீள முடியவில்லை உன் சோதனை!
கொரோனோ கொஞ்சம் எங்களை விடுதலை செய்துதான் . விட்டுவிடேன்!
உடலை ஆயிரம் துயரங்கள் வறுத்தினாலும்....
மனம் இலேசாகி பறக்குமே!
மனித இனம் பிழைக்குமே!