பரதேசி ஆனபிறகு
பரதேசி ஆனபிறகு
சொந்த ஊர் என்று
எனக்கு எதுவும் இல்லை.
தங்கும் இடத்தில்
சொந்தங்களை உருவாக்கி கொண்டும்
பின் விட்டு பிரிந்தும் செல்கின்றேன்.
ஊருக்கு ஊர்
மக்களில் வித்யாசம் பெரிதாக இல்லை.
காதலிக்க ஒருத்தரும்
கதைக் கேட்க ஒருத்தரும்
இருக்கிறார்கள்.
சென்ற வருடத்தில்
பார்த்த நபர் ஒருவரை
எதர்ச்சியா இம்முறை காண நேர்ந்தது.
எங்கோ உங்களை பார்த்திருக்கிறேன் என்றார்.
வேடந்தாங்கலில் பறவைகளோடு
பறவையாக
என்
னை நீங்கள் கண்டிருக்க கூடம் என்றவுடன்
சிறகை விரித்து காட்ட கூறினார்.
நான் பறந்தே காட்டுகிறேன் என்று
மறைந்து போனேன் மேகத்தை கடந்து.
இனி எங்கு செல்வது
அடையாளம் தொலைக்க நினைத்தவனை
அனைவரும் அடையாளம் கண்டப்பின்னர்.
காடு மலையென
எங்கும் செல்ல முடியவில்லை.
குருவிகள் சில
இவனை தெரியாதா என்று
தங்களுக்குள் தங்களுக்குரிய மொழியில்
என்னைப் பற்றிய கதைகளை
பகிர்ந்து கொள்கிறது.