Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Chriseeda Shinny

Abstract Drama Classics

4.8  

Chriseeda Shinny

Abstract Drama Classics

கண்ணாடி

கண்ணாடி

1 min
466



குழந்தை பருவம் முதல் 

பார்த்துப் பார்த்து ரசித்தாயே ! 

உன் முகம் கண்டு முகம் சுளிப்பேனோ ? 

பல தருணங்கள் ஒன்றாய் 

பழகி மகிழ்ந்தோமே !

நீ அழும்போது நான் சிரிப்பேனோ ? 

அச்சம் மறக்க 

ஓடோடி வந்தாயே ! 

இனி அச்சத்தோடு செல்வாயோ ? 

என்னைக் கண்டால் 

உன்னைக் காண்பாயே ! 

நான் இல்லையேல் ,

உன்னை எதிலே அழகாய் காண்பாயோ ? 

உன்னை அழகாய் 

பிரதிபலிப்பேனே ! 

சுடரொளி வீசிச் செல்வாயோ ?

என்றும் நான் உன் முன்னாடி !

துணையாய் இருக்கும் கண்ணாடி !



Rate this content
Log in