வானம்
வானம்


வானவில்லின் நிறங்கள் அனைத்தும் கொண்டது வானம் ,
அதிக நேரம் நாம் காண்பது நீலம் ,
பல ஓவியங்களை காட்டும் வானம் ,
ஆனால் அளக்க முடியாது அதன் நீளம் .
பகலில் வெளிச்சம் தர சூரியனை அழைத்து வருதே !
இரவிலோ அழகிய நிலவை அழைத்து வருமே !
கண் சிமிட்டும் விண்மீன்களும் ஆகாயதிற்கு அழகு சேர்க்குமே !
மீன்களைப் போல நீந்துகின்றதே வென்மேகம் ;
அது கருமேகம் ஆகி மழை முத்துக்கள் தருமே !
எத்தனை அழகு இந்த வானம் ;
அண்ணாந்து மட்டும் பார்க்காமல் தொட நினைபோமா ?