தாயின் இறுதி கடிதம் !!
தாயின் இறுதி கடிதம் !!


மகளே,
என் இறுதி கடிதம்.....
வாழ்க்கை என்னை வாழவிடவில்லை....
கேள் மகளே,
என் சோக கதையை !!!
பிறந்தேன்,
பிறப்பு என்னை ஏமாற்றியது,
பெண்ணாய் பிறப்பதே பாவம் எனும் நாட்டில்
நான் ஊனமாய் பிறந்தேன்!
வளர்ந்தேன்,
வளர்ச்சி என்னை குறுக செய்தது
என் வயது பிள்ளைகள் ஓடி ஆட - நான்
நடக்கவே சிரமப்பட்டேன்!
என் ஏமாற்றங்களை களையெடுக்க
படித்தேன்!!
சொந்தக்காலால் நிற்க இயலாதவள்,
படிப்பால் நின்று காட்டினேன்!
நான் உயர தொடங்கினேன்...
ஆம் ,
அணையும் விளக்கின் பிரகாசமாய்!!
மணந்தேன்,
பெண்பிள்ளைகள் என்றும்
பெற்றவர்களுக்கு பாரம்!
நானோ,
மாற்றுத்திறனாளி !!
பொதி மூட்டையாய் கணந்தேன் போல,
மூட்டையை இறக்கும் இடமும் வந்தது,
என் திருமணமும் முடிந்தது!!!
இழந்தேன்,
திருமணம் எனும் நாடகத்தில்,
ஒரு வருட கதாநாயகியாய் நான்!
நாடகம் முடிந்ததும்,
கைம்பெண்ணாக நான்!!
இழந்த இழப்புக்கு ஈடாக ....
என் உறுதுணையாய் - நீ
என் வயிற்றில் உதிக்க,
வாழ்க்கையின் மறு அத்தியாயத்தை
தொடங்கினேன் - ஆனால்
எனக்கு தெரியவில்லை இது என்
இறுதி அத்தியாயம் என்று!!!
மறைந்தேன்,
உதிரத்தில் கலந்து,
வயிற்றில் உதித்து,
என் கையில் உன்னை
ஏந்த காத்திருந்தேன்!
ஆனால் ,
விதி நம்மை இணைக்கவில்லை,
மாறாய் பிரித்து விட்டது!!
மன்னிப்பாயா மகளே,
உன்னை காணாமல் கண் மூடினேன்!
இந்த புது உலகில்,
உன்னை தனியே விட்டு போய் விட்டேன்!!
உனக்கான என் இறுதி வரிகள்,
பெண்ணாய் பிறந்துவிட்டாய் ,
அதில் தவறில்லை!
நிமிர்ந்து நின்று போராடு,
வாழ்க்கை வழிவிடும்!!
பயங்கள் உன்னை அண்டாமல் ,
கவலைகள் உன்னை நெருங்காமல்,
பாதுகாப்பேன் கண்ணம்மா!!!
இப்படிக்கு,
அம்மா.....