தனித்திரு உலகே தனித்திரு !!
தனித்திரு உலகே தனித்திரு !!


தனித்திரு மனிதா தனித்திரு !!
உலகே நீ பொறுத்திரு
விடியல் வரும் விழித்திரு
அதுவரை கொஞ்சம் தனித்திரு!!
கிருமியின் பிடியில் விழகியிரு
பிணி பரவாமல் ஒதுங்கியிரு
அதுவரை கொஞ்சம் தனித்திரு!!
உயிர்களின் பழியை குறைத்திட
உறவுகள் தம்மை காத்திட
அதுவரை கொஞ்சம் தனித்திரு!!
முகத்தினை கவசத்தால் மறைத்து கொள்
கைகளை நன்றாக கழுவிக்கொள்
கூட்டங்கள் கூடுவதை நிறுத்தி கொள் !!
மருத்துவர் செவிலியர் சேவைகளும்
துப்புரவு பணியாளர் தியாகங்களும்
காவலர்கள் தங்கள் கடமைகளும்
மதித்து கொஞ்சம் தனித்திரு !!
பொறுத்திரு உலகே பொறுத்திரு
விடியல் வரும் வரை விழித்திரு
அதுவரை கொஞ்சம் பொறுத்திரு!!