ஒரு கூழாங்கல் காதல் !!
ஒரு கூழாங்கல் காதல் !!


நதியோரம் நான் இருந்தேன் !
வெறும் கல்லாய் காத்திருந்தேன்!!
அலையாக நீ வந்தாய்
கரையோடு காதல் தந்தாய்
காதல் நம்மை சேர்ந்திடும் முன்
கானல் நீராய் நீ மறைந்தாய்!!
மணலாக நீ வந்தாய்
காற்றோடு காதல் தந்தாய்
கன்னி உந்தன் கை பிடிக்க
புழுதியாக நீ பரந்தாய் !!
பாதமாக நீ வந்தாய்
கொலுசாக காதல் தந்தாய்
சலங்கையாக உன் கால் சேர
மௌனமாய் நீ மறைந்தாய் !!
உன் காதல் தேடி தேடி
காலங்கள் தாண்டி காத்திருந்தேன்
இரவில் வரும் நிலவாக நீயின்றி
கலைந்தோடும் கனவாக நீ வந்தாய்!!
காத்திருந்து காத்திருந்து
ஏமாற்றம் அது ஏந்தி
வெறும் கல்லாய் இருந்த என்னை
கூழாங் கல்லாய் மாற்றிவிட்டாய்!!