அழகிய நட்பு !
அழகிய நட்பு !
உதடுகள் புன்னகை சுமக்க
மனங்களோ அன்பினை வழங்க
பரஸ்பர உதவியும் ஆதரவும்
பிணைப்பினை மேலும் உறுதியாக்க
பிறந்ததே புத்தம் புது உறவு !
நண்பனது இனிய நட்பு !
எதிர்பார்ப்புகள் இங்கு ஏதுமில்லை !
எடுத்துக் கொடுக்க நல் மனமுண்டு !
விட்டுக் கொடுக்க விரும்புவதில்லை !
விடாமல் துணை வரும் அன்பின் பிணைப்புகள் !
உறவை யாசித்து நிற்பதில்லை !
நட்பென்ற உறவு மலர்ந்த பின்
பிரிவென்ற ஒன்று இங்கில்லை !
காலமும் கோலமும் குறித்தே
நட்பு ஓர் நாளும் கவலை கொண்டதில்லை !
காலம் பல கடந்தாலும்
உயிர்ப்புடன் இதயமதில் கேட்கும்
நட்பின் இன்னிசை இராகமே !
நட்பு மனம் கொள்வோம் !
நட்பால் அழகாக்குவோம் அகிலத்தையே !