காதல் தேவதையே....
காதல் தேவதையே....
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
சுயநலத்தினில் சுகம் காணும் இக்காலத்தினில்
பிறர் நலம் போற்றி வாழ்பவள் நீயடி
ஆசைகளுக்கு அடிமைகளாய் வாழும் இக்காலத்தினில்
நிம்மதியே நிரந்தரம் என்று வாழ்பவள் நீயடி
அழகினை ஆராதிக்கும் இக்காலத்தினில்
அன்பிற்கு அடைக்கலம் தந்து வாழ்பவள் நீயடி
சினத்தினால் சிகரம் தொடலாம் என்று நினைக்கும் இக்காலத்தினில்
பொறுமையினால் போரையும் வென்று வாழ்பவள் நீயடி
என் தேவதையே👼
காலங்கள் கடந்தாலும்
உன் குணம் மாறி விடாதே😘