நான் தொலைத்த காதலே...
நான் தொலைத்த காதலே...


கண்ணெதிரே நீ காட்டிய அன்பினைக் கண்டுகொள்ளாமல்,
காணாமல் நீ போன பின்னே நான் கரைவதேனோ?
உணர்வுகளை உதறும் உறவுகளுக்கு மத்தியில்,
என் உணர்வினை உயிரெனக் கொண்டாயே,
உயரே நீ சென்றதும் பின்னே நான் உருகுவதேனோ?
கடந்து போவது மட்டும் வாழ்வில்லையே,
என் காதலே,
உன் நினைவுடன் நான் நகர்வதும் வாழ்க்கையே.....