STORYMIRROR

Bakyanathan Sivanandham

Abstract

5  

Bakyanathan Sivanandham

Abstract

அன்பு

அன்பு

1 min
927

விந்தையான உலகின் விந்தை அன்பு

அன்பால் ஒருவனைக் காக்கவும் இயலும்

அன்பால் ஒருவனைத் தாக்கவும் இயலும்

அன்பு செலுத்தாது வாழ்ந்தால் மிருகமாகிறோம்

அன்பு செலுத்தி வீழ்ந்தால் அடிமையாகிறோம்

ஒருபுறம் மட்டும் இருந்தால் ஓய்ந்து போகிறோம்

இருபுறம் இணைந்திருந்தால் சிலிர்த்து சிரிக்கிறோம்

மறுபுறம் பிரிந்தால் மரணவேதனை கொள்கிறோம்

பொய்யான அன்பைக் கண்டு களைத்துப் போகிறோம்

மெய்யான அன்பைக் கண்டும் காணாமல் வாழ்கிறோம்

மெய்யான பொய்யை புறம் தள்ளுகிறோம்

பொய்யான மெய்யால் அகம் மகிழ்கிறோம்

எங்கே என நாடித் திரிகிறோம்

இங்கே எனக் காண மறக்கிறோம்

அங்கே எனக் கூறி திரிகிறோம்

இல்லை எனக் குறள் கேட்கிறோம்

இல்லை என மனம் வெறுக்கிறோம்

போதும் எனப் பொருள் கொள்கிறோம்

போதாது என மீண்டும் செல்கிறோம்

வேகாது என மீண்டும் கற்கிறோம்

நோகாதே என தெற்றிக் கொள்கிறோம்

தெறினால் மீண்டும் தேடுகிறோம்

நிலையான நிலை என்றோர் நிலை இல்லை என்று தன்நிலை

கொள்ளும் கணம் கனம்!!

வினை மட்டும் விதைத்து எதிர்வினை நோக்கா குணமே தரும் சுகம்!!!


                                


Rate this content
Log in

Similar tamil poem from Abstract