பாரதியார்
பாரதியார்


பார்க்க வா பாரதி
நீ கனவு கண்ட பாரத தேசம் தரணியில் பிறந்ததா எனப் பார்க்க வா பாரதி
வெள்ளையனே வெளியேறு என்றாய் - வெளியேற்றினோம்
மகிழ்ந்து விடாதே பாரதி
சாதி சமயம் கடந்து சகோதரத்துவம் கொள் என்றாய் - சறுக்கினோம்
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்றாய் - மாதரையே கொளுத்தினோம்
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றாய் - ஜகத்திற்கே உணவில்லாமல் விவசாயத்தை அழித்துக் கொண்டிருக்கிறோம்
30 கோடியும் வாழ்வோம் இல்லை 30 கோடி முழுமையும் வீழ்வோம் என்றாய் - எங்களுக்குள்ளேயே சண்டையிட்டு வீழ்ந்து கொண்டிருக்கிறோம்
கண்ணீர் விடாதே பாரதி - அச்சோ
மடையன் உன் ரசிகன்
என் நிலையிலும் உன் விழி நீர் வையம் தொடாது என மறந்தேன்
நீ கனவு கண்ட பாரதம் விலகிச் சென்று கொண்டிருக்கிறது பாரதி
ஏன் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாய்
எழுந்து வா பாரதி
உன் மண்ணின் இளைஞன் வழித்தவறிச் சென்றாலும் இன்னும் அவன் நெஞ்சில்
உன் உயிராகிய தமிழையும் பாரதத்தையும்
விதைத்து வைத்துள்ளான்
அவனை வழிநடத்த அன்று போல் இன்றும் நீ வேண்டும்
எரிமலையாய் எழுந்து வா பாரதி
இன்னொரு தாயின் கருவில் கவிஞனாய் பிறந்து வா பாரதி
இது உன் பிறந்தநாள் வாழ்த்தல்ல நீ மீண்டும் பிறக்க வேண்டும் என்பதற்கான வேட்கை
பிறந்து எழுந்து வா பாரதி
மீண்டும் ஒரு முறை ரௌத்திரம் பழகலாம்