ஜன்னல்
ஜன்னல்


எண்ணில்லா பல வாசல் கதவு
இருந்தாலும்.....
ஒரு ஜன்னல் மட்டும் செய்யும்
மன நிறைவு ....
எல்லா வாசலும்
இருவழி தான் .....
எல்லா ஜன்னலும்
ஒருவழி தான் .......
சந்திக்க ஒரு இடம் - ஆம்
சிந்திக்க ஒரு இடம் ....
பிரகாசம் வரும் இடம் - ஆம்
தென்றல் வரும் இடம் ....
மெய் சிலிர்க்க ஒரு இடம் - ஆம்
வாழ்வை தேடும் ஒரு இடம் ....
மேலும் ....
அந்த ஜன்னல்
காட்டும் படங்கள் சில....
தன்னையே மறந்த நிலை ....
தனித்தே நிற்கும் நிலை.....
தானாக கண்தேடும் நிலை ....
எதையோ ரசித்த நிலை.....
ஏழையின் ஜன்னலோ வறுமையை காட்டும்
நடுத்தரவர்க்க ஜன்னலோ நடுநிலையை காட்டும்
பணக்காரன் ஜன்னல் உயர்ந்தரகத்தை காட்டும்
வீட்டுக்கு வீடு.....
சோகங்களை மறைக்க
கவலைகளை மறைக்க
சுகங்கள் பெற
புத்துணர்ச்சி பெற
ஒரு ஜன்னல் .....!!!
அது
கண்ணாடியோ
மரமோ - அல்ல
உள்ளத்தின்
உணர்ச்சிக்கு
ஏற்ற வகையில்
பிரதிபலிக்கும்
ஒரு ஜன்னல் .....!!!