சுகமான சுமைகள்
சுகமான சுமைகள்


சிலையான கடவுளுக்கும் சில சுமைகள்
வணங்கும் மனிதனுக்கும் சில சுமைகள்
காலை கதிரவனுக்கு சில சுமைகள் ..................உதிப்பதற்காக
மாலை கதிரவனுக்கு சில சுமைகள்..................மறைவதற்காக
இந்த மண்ணுக்கும் சில சுமைகள்.................தாங்குவதற்காக
நிலவின் இரவுக்கும் சில சுமைகள்.........................கூடலுக்காக
இரவின் நிலவுக்கும் சில சுமைகள்........................ஊடலுக்காக
நட்சத்திர கூட்டத்துக்கும் சில சுமைகள்...........நெருடலுக்காக
மலை அருவிக்கும் சில சுமைகள்......................சலனத்துக்காக
சில சுமைகள் ........சில சுகங்கள் .........
அவள் இதழ் முத்தங்கள் ............சுகமாய் என் கன்னத்தில்
அவள் இதய துடிப்புகள் ....................ராகமாய் என் காதில்
அவள் பிஞ்சு பாதங்கள் ............ரசனையாய் என் மனதில்
என் கண்ணுக்குள்
ஆயிரம் சுமைகள்
என் நெஞ்சுக்குள்
ஆயிரம் சுகங்கள்
இதயத்துக்கு சில சுமைகள்................ சுகமாய் துடிப்பதற்காக
விழிகளுக்கு சில சுமைகள்................சுகத்தை காண்பதற்காக
கைகளுக்கு சில சுமைகள்.........சுகத்துடன் கொடுப்பதற்காக
சுமைகளோடு சில நாட்கள்
சுகங்களோடு சில நாட்கள்
அன்று இல்லாத சுகங்கள் ...........இன்று இருந்தும் சுமைகள்.......
அன்றோ கணினி இல்லாத சுகங்கள் ........இன்றோ சுமைகள்.....
அன்றோ கைபேசி இல்லாத சுகங்கள் ........இன்றோ சுமைகள்.....
அன்றோ மின்னஞ்சல் இல்லாத சுகங்கள் ........இன்றோ சுமைகள்.....
இது வாழ்க்கையின் சுகமான சுமைகள் .........!!!
இல்லை வாழ்க்கையின் சுமையான சுகங்கள் .........!!!