முடிஞ்சா என்ன பிடி
முடிஞ்சா என்ன பிடி


கொடிய அரக்கன்
கொரோனா வைரஸ்
தலைவனாகிவிட்டு
சவால் விடுகிறான்
முடிஞ்சா என்ன பிடி .....!!!
இது வரை இல்லாத
தலைவன் நமக்கு
தலையெழுத்து - என்ன
மாற்றவா முடியும்
முடிஞ்சா நம்மை காப்போம் ....!!!
ராட்சஸ மிருகம்
இவனை தலையாக
யார் தேர்ந்தெடுத்தது
இப்போதெல்லாம்
சுதந்திரமே பறிபோய் .......!!!
பயந்தே வீட்டினுள்
முகமூடி அணிந்து
மரண பயம் தந்து
மண்ணில் உலாவும்
நீ எல்லாம் ஒரு தலைவன்.....!!!
மக்களை கவலையில்
வேதனையில் தள்ளி
முடிஞ்சா என்ன பிடி
என்று சொல்கிறாய்
நீ எல்லாம் என்ன தலைவன்.....!!!