அகங்காரத்தால் அழிந்து போ .....
அகங்காரத்தால் அழிந்து போ .....
இனிய உலகின்
புதிய ஹீரோ - இல்லை
புதிய வில்லன்
மர்ம வைரஸ் .............!!!
இந்த மர்ம
வைரஸுக்கு
கொரோனா என
பெயர் சூட்டி
மருந்து கண்டு பிடிக்க
மருத்துவ துறை
முயற்சித்து
மர்மமாய் மறைந்தது.........!!!
இதுவரை சொல்லி வந்த
"வரும் முன் காப்போம்"
இனி சொல்ல வேண்டியது
"பெறுவதை விட பாதுகாப்போம்"
ஆணவத்தால்
ஆடிய மனிதன்
ஆட்டம் கண்டு
அடங்கி.....பயந்து ......
வீடே கதி என்று
வீதி கூட
செல்லாமல்
வீணே நாட்களை நகர .......
இந்நிலையிலும் ஒருவன்
முக கவசம் அணிந்து
முணு மூணுக்கிரான்
என்னை கொரோனா
அடையாளம் கொள்ள
முடியாதே ...........................!!!
மற்றொருவன் சொல்கிறான்
நான் கை கவசம் அணிந்து
அந்த கொரோனாவை
குத்தி கொலை செய்ய
முடியுமே ...........................!!!
கொரோனா
மெதுவாய் மனிதனிடம்
முணு முணுக்கிறது
மடையனே
அகங்காரத்தால் அழிய போவது
நீ தான் தெரியுமா ........................!!!