நுரைக்கும் கோப்பைகள்
நுரைக்கும் கோப்பைகள்
எப்போதும் அஃதே சொல் வேண்டாம் மது ;
சோதனைகள் வாழ்க்கையில் வருவதெல்லாம்
சாதனைகள் ஆக்கி வரலாற்றில் சோலை காணத்தான்
சும்மா இருந்தால் வருமா சுகம்
இதய பம்பரத்தை நம்புக்கைக்கயிறு துப்பினால்
துயரம் போக்க துள்ளும் செய்ய
துடித்திடும் தோளை நிமிர்த்திடச் செய்வீர்
கள்ளினால் சோதனைகள் குறைந்திடுமா ?
நீர் நின்றால் தென்றல் புறப்பட்டால் பூகம்பம்
வஞ்சம்தரும் மஞ்சள்அமில போதை எதற்கு
கற்கண்டு செயலினை மனதில் இருத்திடுக
இல்லறம் என்பதே இருகூட்டு உறவல்ல
நல்லறம் காக்கும் நாட்டு வாழ்வின் ஆலயம்
புளிக்காத சோறு மட்டும் போதுமே
களிக்கும் வண்ணப்போதை எதற்கு?
காயப்பட்ட கடின உழைப்பில் விளைவதுதான்
உயர்வு- நன்மைபேசியே போக்குவாய் பிழை
அலைகள் பாறையில்
மோதியதும் அங்கே குளுமைக்காற்று
மனமிறுக்கம் மாற்ற மதுபோதை எதற்கு
மானுடமே விஷமாக்கும் போதை வினைஆழ்த்துயர்
பூரிப்படைய உழைப்பில் உறுதிகொள்
போதை கக்கும் தளுவை புறத்தே தள்
எப்போதும் ஈதே சொல் வேண்டாம் மது