கோழை மர(ற)ம்
கோழை மர(ற)ம்


கோழையை விட்டு எழுந்த நீ
கோழையை விட்டு எழு
மதி உன்னை
சதியில் இருந்து காக்கும்
மரம் காத்து
மறம் காக்க
நம் பாட்டனும் பூட்டனும் சொல்லித்தந்தான்
ஆனால் இங்கே
மரமும் இல்லை
மறமும் இல்லை
நீ பிறந்த பின்
கோழையை உதரினாய்
இறக்கும் முன்னும்
கோழையை உதறு
உன்னை உலகு அறியா
ஆனால் பிரபஞ்சம் அறியும்
நீயும் அறி
யார் நீ என்று
மதிப்பில்லா தாளை
நீ மதிப்பாயானால்
மதி கெட்டு அலைவாய்
அளை வாயிலிருந்து மீள்
வாழ் வீரத்தோடு
அறி மதியோடு
நீ வாழ்ந்து கொண்டே இருப்பாய்