மரணம்
மரணம்
நினைவு நாள்
மரணித்தவர்கு உயிர் கொடுக்கிறதா...
மரணம்
மரணத்தை புரிய...
மரணம் என்றால் என்ன என்பதை அறிய செய்கிறதா!
ஒரு நாய்க்குட்டி...
குட்டி நாய்...
உணவுக்காக
ஏங்கி தவிப்பதை
மரணம் உணருமா...
உணர்த்துமா...
இந்த உலகம் ...
மரணமா என்று கேட்கும் பொழுது
சிரிக்க தோன்றும்!
வாழ்வா என்று சொல்லும் போது
என்ன தோன்றும்...
மரணத்தை தவிர...
மரணம்...
ஒருவர் யார் என்று தெரியவில்லையா
தெரியப்படுத்தும்
வாழ்வை விட...
வாழலாம்
மரணிக்கும் முன்...
மரணம் இல்லா வாழ்வை பெற்று விட ...
வேண்டாம்...
மரணம் குறித்து விசாரணை செய்ய வேண்டாம்...
அது ஒன்றும் அவ்வளவு பெரிய காரியம் இல்லை...
ஒரு நாள் மரணம் விசாரிக்கும்
நம்மை பற்றி...
நம்மை பற்றிய விசாரணை போது
வாதிட கூட முடியாது நம்மால்...
ஏன் இன்னும் சொல்ல போனால் வேடிக்கை கூட பார்க்க முடியாது...
பிறகு ஏன் ...
மரணம் முடிவு...
பிறப்பு முடிவை
நோக்கி
நடுவில்
நம் எண்ணம்...
வாழ்வோம்...
