பூக்கள்
பூக்கள்
பூக்களை உனக்கு பிடிக்குமா?
ம்ம்ம்...
வண்ணம்
வடிவம்
வாசம் செய்யும் இடம்...
இதைப் பொறுத்து
பூக்களை எனக்கு பிடிக்கும்
எனக்கும் அப்படித்தான்...
பூக்கள் எதனால் அழகு என்று நீ நினைக்கிறாய்?
ம்ம்ம்...
வண்ணம்
வடிவம்
வாசம் செய்யும் இடம்...
இதைப் பொறுத்து
பூக்கள் அழகு என்று நான் நினைக்கிறேன்...
நானும் அப்படித்தான் நினைக்கிறேன்...
வண்டிற்கு பூ பிடிக்க என்ன காரணம் ?
அது வண்டைப் பொறுத்தது...
பூவின் தாதைப் பொறுத்தது...
நான் அப்படி நினைக்கவில்லை...
வேறு எப்படி ?!
வேறு எப்படி என்றால்...
அது அவைகளின் ஆடலைப் பொறுத்தது...
உறை ஆடலை பொறுத்தது...
அப்படியா...
ஆடல்...
உறைந்த
உறைகின்ற
உறையும்
ஆடலைப் பொறுத்ததோ
அப்படியே...

