STORYMIRROR

Muthumanikandan N

Romance

5  

Muthumanikandan N

Romance

கலியுக கம்பன்

கலியுக கம்பன்

1 min
414


இந்த பிரம்மனுக்கென்ன 

அவர் பாட்டுக்கு படைத்துவிட்டார்


எந்த கொம்பனும் எழுதி முடிக்காத கவிதை அவள்


இந்த கம்பன் மட்டும் எழுதிவிட எளிமையான காவியமா?


கொளுசு போட்டு நடந்து வா

இளசுகள் எல்லாம் இசை கேட்கட்டும்


வளையல் மாட்டி கைகள் அசை 

அதைமாட்டிவிட முடியாத தவிப்பில் நானும் மாட்டிக்கொள்ள


குங்கும பொட்டும் 

போராடும்

விரல் நுனி தொட்டு புருவங்களிடையில் சிறை செல்ல,

கங்கையில் அதுவும் நீராடும்

உன் வியர்வையில் 

நனைந்தபோது புள்ள


 காஞ்சிப்பட்டும்

ஆயிரம் கடைகளில் தவமிருக்கும்

அவள் அழகிய இடையில் சுற்றிக்கொள்ள


மல்லிகைப்பூவோ மார்கழிப் பனியில் காத்திருக்கும்

அந்த கார்மேககூந்தலில் வெக்கத்தோடடு வைக்கப்பட 


ஜிமிக்கி கம்மலும் பிரபலமாகும்

இந்த அழகுதேசத்தின் காதுகளில் ஐக்கியமாகும்போது


ஒவ்வொரு நாளும் 

திருநாளே அவள்

தாவணி தரிசனம் கிடைத்துவிட்டால்


திருவிழாவும்

வெறுவிழாவே

உன்னை வீட்டினில் வைத்து

அடைத்துவிட்டால்!!


Rate this content
Log in

Similar tamil poem from Romance