உன்னை எண்ணி
உன்னை எண்ணி
அக்கா குருவி போல நிகழா ஒன்றிற்கு மனம் ஏங்குகிறது
உன் பிறந்தநாள் ஒரு தினமாக கடக்க இயலா.. நான் தவிக்கும் இந்த தவிப்புக்கு பெயர் தான் என்ன?
பிரிந்து சென்ற நொடியில் என் மனதோடு வடுவாக பதிந்தாய், மறக்க நினைத்து உன்னை நினைவில் கொண்ட நாட்கள் தான் இங்கு அதிகம்....
தொலைவில் இருந்தும் வலியில் இருந்தும் உன் பிறந்தநாள் எனக்கு புது வருட பிறப்பு தான், கொண்டாட முடியவில்லை ஆனால் உன் கொண்டாட்டத்திற்கு வேண்டிக்கொள்கிறேன் இறைவனை....
ஒரு வகையில் பிடிக்காத நாள் ஏன் தெரியுமா அன்று உன் வாழ்க்கை விதியில் என் பெயர் எழுத மறந்த நாளாயிற்றே இருப்பினும்....மகிழ்வோடு இரு என் கனவு கணவா....
சில காதல் கல்யாணத்தில் முடியவில்லை என்றாலும் காவியம் தான்
அப்படி இருக்கையில் என்றும் நீ என்
காவியதலைவன் தான் ❤