மீண்டுமா
மீண்டுமா
நீ மீண்டும் வருவாயா என ஏங்கி தவித்தபோது வந்தாய்
அன்று அழுது தவித்த என்னை பார்த்த அதே அறை இன்று உன் சுவாசத்தை கண்டது
அன்று ஜடம் போல இருந்த நான் இன்று அதே அறையில் தேவதை ஆனேன்
அன்று என் கண்ணீரை ஏந்திய அதே தலையணை இன்று என் சிரிப்பை காண்கிறது
அன்று வேதனையில் வாடிய முகத்தை கண்ட என அறை கண்ணாடி இன்று நம் இருவரையும் தம்பத்திகளாக பார்க்கிறது
இப்படி அனைத்தும் மாறிவிடுமோ என நானே பொறாமைக்கொண்டு விட்டேன் போல
இன்று மீண்டும் அழுகுறல் தவிப்பு விரத்தி என இவை அனைத்தையும் அனுபவிக்கிறேன்
ஏன்????
நாம் என மாறிய நொடிகள்
நாம் என மாறிய இடங்கள் உனக்கு நினைவில்லையா
உன் நினைவுகளோட கலந்த நிஜம் இல்லையா நான்
நகரும் இந்த நாட்களோடு என்னையும் கடந்து சென்றுவிட்டாயா
இன்றும் உன் வருகைக்காக காத்திருக்கும் உன்னவள் ❤️
Oct 6& oct 12

