இன்னும் இது காதல் தானா?
இன்னும் இது காதல் தானா?
இப்போதெல்லாம் மனம் வலிப்பதில்லை
உணரும் அளவு கூட என் உள்ளம் நிலையாய் இருக்கவில்லை
என்னுள் மலர்ந்த காதல் உன் இந்நாள் மீது அல்ல முதலில் கண்ட முன்னாள் உன் மீது
உன்னை மாற கூறியிருந்தால் பிழை ஆனால் திருந்தி எனக்கு மாறா அரவணைப்பை அல்லவா தர வேண்டினேன்
உன் ஆயுளை பரிசாக கேட்டேன் தவறா
சிலவற்றை விட மறுத்து என்னை முழுமையாக மறந்துவிட்டாய்
நீயாவது என்னை எண்ணி என்றோ ஓர் நொடி மனம் கலங்குவாய்
நானோ உன்னை மட்டுமே எண்ணி நிதம் நகர்கிறேன்
எதார்த்த உலகில் எளிதான சிலவற்றை மட்டுமே கேட்டேன்
என் அற்ப புத்தி நீ என்றாவது வாங்கிவருவாய் என பத்து ரூபாய் கம்மளுக்கு காத்து கிடக்கிறது
பாவம் அது இன்னும் அறியவில்லை அது என்றுமே இயலா காலம்
நான் ஒரு பைத்தியக்காரி உன்னிடம் புலம்பி என்ன பயன்
என்னை புரிந்திருந்தால் என்றோ மாறி என் பெண்மை தேடும் கேளிகைகளை நிறைவேற்றிருப்பாய்
ஒற்றை ரோஜா
ஒரு காகித மடல்
காதோரம் உரசி உன்னை நினைவூட்ட கம்மல்
உன் செவிக்கு மட்டுமே எட்டுமளவு மெல்லிய கொலுசு
உன் விரல் கோர்த்த உணர்வை தர மோதிரம்
என் வருகை நீ அறிய அழகு வளையல்
உன்னவள் என ஊர் அறிய ஒரு பயணம்
உலகறிய மிகைபூட்டி சொல்ல உனக்கொரு பணி
என் அம்மா கண் கலங்கும் அளவு நீ என் மீது வைக்கும் காதல்
என் அம்மம்மா பொறாமை கொள்ளும் அளவு பாசம்
உற்றார் உறவினர்" கொடுத்து வைத்தவள்" என எண்ணும் வாழ்வு
இவ்வளவு மட்டும் தானடா கேட்டேன்
போடா..
நீயாவது மகிழ்வோடு இரு
இப்படிக்கு,
உன் வாழ்வின் தேவையற்ற ஓர் பக்கம்
23/11
The day I felt connecting back is impossible and useless at the same time.

