என்னவனே ❤
என்னவனே ❤
பொறாமை எனக்கும் உண்டு ஆனால் இம்முறை தவறு அவனுடையது
என் அன்னை அன்றே கண்டித்தால் இவன் வேண்டாம் என்று அவன் காதல் மொழி என்னை குழப்பிவிட்டது
கெஞ்சினேன் மெரட்டினேன் மாறவில்லையே அவன் மனம் கல்நெஞ்சக்காரா
அவள் பின்னாலே அவன் காலம் கரைகிறது
மனம் பொறக்கவில்லை கேட்டுவிட்டேனே
"இனி உன்னோடு தான் வாழ்க்கை என்றான்
உன்னில் தொடங்கி உன்னில் முடிவதுதான் என் ஆயுள் என்றான்"...இன்றோ........
அவன் மகளோடவே மன்றாடிகொண்டிருக்கிறான்
ராட்சசா....
அதற்கு அவனோ " என் உலகம் கொடுத்த முதல் பரிசு, பாதுகாப்பதை தவிர வேறென்ன வேலை " என்று என்னையே
குழப்பிவிட்டான்...
இப்போது அவன் என்னை உலகம் என்கிறானா இல்லை அந்த குறும்புகாரியை முதல் பரிசு என்று என்னை ஏளனம் செய்கிறானா ❤
இருக்கட்டும் என்னவனாயிற்றே...
காலம் முடியும் வரை அவன் என்றுமே என் காதலன் தான் ❤
