வாராய் எந்தன் சிங்கப் பெண்ணே !
வாராய் எந்தன் சிங்கப் பெண்ணே !


ஆணுக்குப் பெண்ணிங்கு
சரிநிகர் சமானமென
வாய்ச்சொல் பேசி
செயலில் கோட்டை விடுவோரின்
வெற்றுப் பிதற்றல்களில்
கவனம் கொள்ளாது
முன்னேற்றம் முடக்கும்
முட்கரங்கள் விலக்கியே
காயங்கள் புறையோட விடாது
மனதிடங் கொண்டு மருந்திட்டே
சுமக்கும் பாரங்களின் நடுவிலும்
சுட்ட தங்கமாய் ஜொலித்து
அக்கினிச் சிறகு விரிக்கும்
ஃபீனிகஸ் பறவையாய்
சமுதாய் வானில்
சிறகு விரிப்போம் !
உத்வேக சீறலுடன்
விரைந்து வாராய்
எந்தன் சிங்கப் பெண்ணே !